நாட்டுப்பற்றும் வீரமும்
நமக்குமட்டுமே சொந்தமல்ல.
இந்திய இராணுவம் நமது தேசத்தின் பாதுகாப்பை முதல் கடமையாகவும் பேரிடர் சமயங்களில் நாட்டுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அ டுத்ததாகவும்
கொண்டு செயலாற்றும் ஒரு அமைப்பு.
இன்றைய சூழ் நிலையில் நமது நாட்டிலும் அண்டை நாடுகளிலும் ஏற்பட்டுவரும் கலவரங்களினால் எல்லைப்புறங்கள் எப்பொழுதும் போர்க்கால நிலையிலேயே இருக்கின்றன என்பதை நாம் அறிவோம் .
நாட்டுப்பற்று என்பது நமக்கு மட்டுமே சொந்தமல்லவே.நம்மைப்போலவே அண்டைநாட்டு இராணுவத்தினரும் அவரவர்களது நாட்டின் எல்லைப்புறங்களைப் பாதுகாப்பார்களல்லவா. ஆனால் ஒரு நாட்டின் நிலைப்பாடு என்ன என்பதை இராணுவத்தினர் நன்றாகப் புறிந்துகொண்டு செயலாற்றவேண்டும்.
உதாரணமாக காஷ்மீர் பிரச்சினையைக் காரணம்காட்டி பாகிஸ்தான் இன்றுவரை நமது எல்லைப்புறத்தை பதட்டமான நிலையிலேயே வைத்திருக்கிறது.போர் என்று அறிவிக்கப்படாத நிலையில் தினமும் ஓரிரு இந்திய அல்லது பாகிஸ்தானிய இராணுவத்தினர் எல்லைப்புறத்தில் மரணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட எல்லைப்புற சலசலப்புகளில் போர்க்கால தர்மங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.போர் என்று வந்தாலும்கூட பாகிஸ்தான் அந்த தர்மங்களைக் கடைப்பிடிப்பதில்லை.
1999 ல் நடந்த கார்கில் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட நமது இராணுவ அதிகாரி கேப்டன் காலியா மற்றும் 5 இராணுவத்தினரை உயிருடன் அங்கம் அங்கமாக சிதைத்து கொன்றார்கள் என்பதை இந்த நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் 1971 ம் ஆண்டு நடந்த போர் வித்தியாசமானது.கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி பங்களாதேஷ் என்ற தனி நாடாகப்பிரிந்தது.போர் நிறுத்தம் பிரகடனப்படுத்தி 93000 பாகிஸ்தானிய இராணுவத்தினர் இந்திய இராணுவத்திடம் 16 December 1971 ல் சரணடைந்த பின்னும் மேற்கு பாகிஸ்தானில் கடைசி முயற்சியாக அவர்கள் நமது 3 rd Grenediers என்ற படைப்பிரிவின் மீது ஜம்முவுக்கருகில் 17 December காலை 0400 மணியளவில் பயங்கரமான தாக்குதல் நடத்தினார்கள்
.
35 Frontier Force Rifles என்ற பாகிஸ்தானிய படைப்பிரிவு அவர்களது உயர் அதிகாரி Lt Colonel Mohd Akhram Raja என்பவரின் தலைமையில் நமது படைப்பிரிவின் Major Hoshiyar singh என்பவரின் சுமார் நூறுபேர் கொண்ட இலக்கைத் தாக்கினார்கள்.
இங்குதான் போரின் இலக்கணம் வகுக்கப்படுகிறது.பொழுது விடிவதற்குள் நமது இலக்கைக் கைப்பற்றிவிடவேண்டும் என்று அவர்கள் ஒரு வெறியுடன் போரிட,செய் அல்லது செத்துமடி என்று நமது வீரர்கள் உதிரத்தில் நீராட December 17 பொழுது புலர்ந்தது.
நமது இலக்கிற்கு சுமார் நூறு அடி தூரத்தில் பாகிஸ்தானிய படைத்தளபதி Lt Col Mohd Akhram Raja வும் சுமார் 100-150 படைவீரர்களும் சிதறிக்கிடக்க நமது அதிகாரி மேஜர் ஹோஷியார் சிங் மற்றும் விழுப்புண் விருது பெற்ற சில வீரர்களுமே மிஞ்சினர்.
காலையில் அங்கு வந்த நமது படைத்தளபதி Lt Col Airy பாகிஸ்தானிய படைத்தளபதியின் வீரத்தையும் அவரது நாட்டுக்காக அவர் செய்துள்ள உயிர் தியாகத்தையும் எழுத்து மூலமாகப் பாராட்டி பாகிஸ்தானிய அரசு அந்த மாவீரனுக்கு தகுந்த மரியாதை செய்யவேண்டும் என்ற வேண்டுகோளுடன் அவரது உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாகிஸ்தானிய அரசு அவருக்கு Hillal -e-Zurrat (நமது மகா வீர சக்கரத்திற்கு ஒப்பானது.)என்ற விருது வழங்கி கௌரவித்தது.நமது படைத்தளபதின் பரிந்துரைக் கடிதம் இன்றுவரை அவர்களது படைப்பிரிவில் அலங்கரிக்கிறது.
35 F F R Battalion Office.
இந்திய அரசு மேஜர் ஹோஷியார் சிங்கிற்கு மிகப்பெரும் வீர விருதான பரம் வீர் சக்ரம் வழங்கி கௌரவித்தது.
ஹோ ஷி யார் சிங்கின் மகன் இன்று ஒரு உயர் இராணுவ அதிகாரி என்பது ஒரு பெருமைக்குரிய செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக