ஞாயிறு, 10 ஜூலை, 2022

                                   மண் மேடுகள். ......( தொடர்  )-2

                   பத்து அத்தியாயங்களடங்கிய  இந்த நாவலில் இது 2 வது. 

2. சன்னாநல்லூர்.

                    நல்லார்க்குத் தம் ஊரென்றூரில்லை நன்னெறிச்

                   செல்வார்க்குந் தம் மூறென்றூரில்லை யல்லாக்

                   கடைகட்குந் தம் ஊரென்றூரில்லை தங்கைத்

                   துடையாக்கும் எவ்வூருமூர்.

                                                                                                          -நான்மணிக்கடிகை

 

விபத்துகள் நேரத்தான் செய்கின்றன. எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடனும்  எவ்வளவோ பயிற்சிகளுடனும் வண்டி ஓட்டும் நமக்கு விபத்துகள் நேரும்போது அதற்கு விளக்கமே கிடையாது. அப்படி விளக்கத்திற்கு உட்பட்டு ஒன்று நடந்தால் அது திட்டமிடப்பட்ட செயல் என்று அதற்கு கிரிமினல் - சிவில் குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்படலாம். விபத்துகள், விபத்துகளே அன்றி அதற்கு விளக்கம் சொல்ல முடியாது. வண்டி சக்கரம் பின்னோக்கி ஓடுவது போல் ஒரு சில வினாடிகள் எனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறேன்.

பள்ளிப்பருவம்முடியும்வரைஎனதுவாழ்க்கைவித்தியாசமானதாகஇருந்தது. அம்மா அப்பாவுடன் அவ்வப்பொழுது வெளியூர் சென்று வந்திருந்தாலும் எனது உலகம் சென்னையைச் சுற்றியதுதான். துன்பம் என்பதற்கு அர்த்தம் புரியாத வாழ்க்கை. பணத்திற்கோ, பொருள் வசதிகளுக்கோ அல்லது அன்பிற்கோ நான் ஏங்கியவள் இல்லை. இளமையில் நகர வாழ்க்கைதான் உலகம் என்றிருந்த எனக்கு கிராமம் என்று ஒன்று உள்ளது என்றோ இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தைப் பெருமளவிற்கு பொறுத்தே உள்ளது என்றோ என் சிற்றறிவிற்கு எட்டாத இளம்வயது. அந்த வயதில் பட்டிக் காட்டிலேயேப் பிறந்து வளர்ந்து சென்னைக்குப் படிக்க வந்த தேவகி எனக்கு உற்ற தோழியானாள்.  சத்தியம், நேர்மை, பொய்பேசாமை, இனிமையான பேச்சு, உண்மையான அன்பு எல்லாம் அமையப் பெற்ற ஒரு மிகச்சிறப்பான பெண் அவள். அவளை முதன் முதல் சந்தித்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

பள்ளிக்கூட இறுதி வகுப்பு முடிந்து கல்லூரி சேர்க்கைக்காக எல்லா கல்லூரிகளிலும் கூட்டம் கூட்டமாக மாணவ மாணவியர் குவிந்து கொண்டிருந்தநேரம். புகழ் பெற்ற பெண்கள் கல்லூரி ஒன்றில் நான் சேர்ந்து விட்ட இரண்டாம்நாள். மற்ற தோழியர்களுக்கு உதவும் பொருட்டு கல்லூரி சென்ற நான் கல்லூரி வளாகத்தில் ஒரு முதியவரும் ஒரு இளம் பெண்ணும் கண்ணீருடன் நிற்பதைக் கண்டு என்னுள் வழக்கமாக எழும் பிறர்க்கு உதவும் உணர்வு தோன்ற அந்தக் கிராமப்புற முதியவரிடம் போய் ஏதாவது உதவி வேண்டுமா என்று விசாரித்தேன். அந்தப் பெண் அன்று கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் தஞ்சை மாவட்ட கிராமப்புறமாதலால் பெண்ணை மாணவியர் விடுதியில் சேர்த்திருப்பதாகவும் முதன் முதலாகப் பெண்ணை யாருடைய துணையுமின்றி தனியாக விட்டுப் போவது கலக்கமாக இருப்பதாகவும் பெரியவர் சொல்லுகிறார். ஒருவினாடிநேரம்நான்அந்தப்பெண்ணைப்பார்க்கிறேன். வெளியுலகம் அறியாத ஒரு மிரட்சியை அவள் கண்களில் பார்த்தேன். அருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டு இன்று முதல் நான் தான் உனக்குப் பாதுகாவலர். எனது தந்தை ஒரு காவல் துறை உயர் அதிகாரி;  எனது தாய் ஒரு கல்வி அதிகாரி. சென்னையிலேயேப் பிறந்து வளர்ந்த எனக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. இன்று முதல் நீ தான் எனது தங்கை மாதிரி.  கொஞ்சம் கூடப் பயப்பட வேண்டாம். ஐயா !  பெரியவரே ! நீங்கள் தைரியமாகப் போய் வாருங்கள். எங்கள் வீட்டு தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் பெண்ணுடன் பேசுவதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். நான் உங்கள் பெண் தேவகிக்கு உற்ற தோழியாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

அன்று அறிமுகமான நட்பு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டது கடைசி வரை தொடர்ந்தது. அறிமுகமாகி சில மாதங்கள் சென்று அரை ஆண்டு விடுமுறை வந்தது. நெல் காய்க்கும் மரங்களை நீ பார்த்திருக்கிறாயா? எங்கள் கிராமத்திற்கு வா, பார்க்கலாம் என்று தேவகி ழைக்க உண்மையாகவே நான் அந்த மரங்களைப் பார்க்கப் புறப்பட்டேன்.

பெண்மை மலர்ந்து இளமையின் அடிவாயிலில் கால்வைத்திருந்தநேரம். உடலில் ஏற்படும் பல மாற்றங்களை தனிமையில் தொட்டுப்பார்த்து எனக்கு நானே வியந்து கொள்ளும் ஒரு விடலைப்பருவம். அந்த நிலையில் கிராமத்து அறிமுகம் எனக்குள் வியப்பான தொரு உலகத்தைக்காட்டியது. சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள் மயிலாடுதுறையில் மாற்று வண்டி ஏறி நன்னிலம் என்ற ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது இருள் பிரியும் இளங்காலை நேரம். நன்னிலம் என்றஊர்  5  கி.மீ. தூரத்திலிருந்தாலும் சன்னாநல்லூர் என்ற இடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு நன்னிலம் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

 

அது ஆடி-ஆவணி மாதம் என நினைக்கிறேன். எங்கு நோக்கினும் வயல்களில் நீர்த்தேக்கமும் நாற்றங்காலும் உழவும் நடந்துகொண்டிருந்தது. சன்னாநல்லூர் என்ற அழகாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். செந்நெல் விளையும் இந்த ஊருக்கு செந்நெல்லூர் என்று பெயர் இருந்து பின்னர் சன்னாநல்லூர் என்று ஆனதோ என்னவோ, காவிரியின் கிளை நதிகளான முடிகொண்டான்ஆறு தெற்கிலும் திருமலைராஜன் ஆறு வடக்கிலும் ஓடுகிறது. மயிலாடுதுறையில் காவிரியைத்தாண்டும் போது சிறிய வாய்க்காலாக ஓடும். அம்மா நதியைப் பார்க்கிறோம். இளமைத் திமிரில்எழில்பூத்துக் குலுங்கும் இள மங்கையைப்போல் கடல் போன்ற பேரிரைச்சலுடன் கூடிய அலைகளுடன் முட்டி மோதிக்கொண்டு கர்நாடகா மாநிலத்திலும் பின்னர் திருச்சி மாவட்டத்திலும் ஓடிவரும் காவிரி பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டிணம்) கடலோடு கலக்கிறாள். மயிலாடுதுறையில் அவளைசந்திக்கும் போது எண்ணற்ற செல்வங்களைப் பெற்று இம்மண்ணுக்கு வழங்கி விட்டு காய்ந்து சருகாகிய ஒரு கிழவியை சந்திப்பதுபோல்  இருக்கிறது.

எனது செல்வங்களைப் பாருங்கள் என்பதுபோல் அடுத்தடுத்து மஞ்சளாறு, வீரசோழன், நண்டலார், நூலார், அரசலாறு, திருமலைராஜன்முடிகொண்டான், புத்தாறு, வெட்டாறு, ஓடம்போகி, கோரையாறு, பாமினியாறு என்று தஞ்சை மாவட்டத்தின் குறுக்கிலும் நெடுக்கிலும் ஏராளமான ஆறுகள் ஓடுகின்றன.

உலகமெல்லாம் ஓரினம் என்று கனவு கண்ட பாரதி சிந்து நதியின் மிசை நிலவினிலே, சேரநாட்டிளம்பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம் என்று பாடினான். இன்று நாம் காவிரியின் நீர்ப்பங்கீடு காரணமாக முடிவற்ற போராக அண்டை மாநிலங்களுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்.

கும்பகோணம்-நாகப்பட்டிணம்என்றமேற்கு,கிழக்குசாலையும், திருவாரூர்-மயிலாடுதுறை என்ற தெற்கு வடக்கு சாலையும் சந்திக்குமிடமே சன்னாநல்லூர், அழுக்குப் படிந்த உடலையும் அகந்தை படிந்த உள்ளத்தையும் நன்றாகக் கழுவிவிட்டு எங்கள் ஊருக்குள் வாருங்கள் என்று உலகத்திற்கு சொல்லாமல் சொல்லுவது போல் ஊரின் நான்கு திசை எல்லைப் புறங்களிலும் நீர் நிறைந்த குளங்களும் குளத்தின் கரையில் ஒருசத்திரமும் இருக்கின்றன. இந்தக் கிராமத்தின் பொலிவை வசந்தம், கோடை, மழை, குளிர் என்று ஒவ்வொரு காலத்திலும் கண்டு ரசிக்க ஒரு தனி உள்ளம் வேண்டும்.

உதிராத மலர் போன்று முதிராத எண்ணங்கள் கொண்டிருந்த அந்த இளமைப் பருவத்தில் கிராமத்தின் அறிமுகம் எனக்கு ஒரு பொன்னுலகத்தின் வாசலைத் திறந்து விட்டது போன்றிருந்தது. அழகிய சிற்றம்பலம் என்னும் தேவகியின் அப்பாவும் சித்திரப்பாவை என்ற தேவகியின் அம்மாவும் எனக்கு அறிமுகமாகிறார்கள். தேவகியின் அப்பாவை அன்று சென்னையில் ஒரு சில நிமிடங்களே சந்தித்திருந்தாலும் இப்பொழுதுதான் அவரையும் கிராமப்புற வாழ்க்கையையும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

!     இலக்கணம் இலக்கியம் என்று வாய் கிழியப் பேசியும், பட்டிமன்றம்போட்டும்போட்டிகள்நடத்தும்நகரவாசிகளே! ஒருமுறைஇப்படிநமதுகிராமங்களுக்குவாருங்கள். சிலருடையபெயரைக்கேட்டு, சிலஊர்களின்பெயரைக்கேட்டுப்பாருங்கள். உங்களதுஇலக்கியத்தின்இலக்கணத்திற்குஇவர்கள்விளக்கம்சொல்லுவார்கள்.

சன்னாநல்லூர் கிராமத்து அறிமுகம் ஒரு அற்புதமான இலக்கியத்தைப் படிப்பது போன்ற இன்பத்தை ஏற்படுத்துகிறது.. கெண்டைக்கால்வரைத் துணியைத்தூக்கிக்கட்டிக்கொண்டு,இளமைத் திமிரான ஈர்க்கும் இடைபுகா இள மார்பகங்களை முரட்டுத் துணியால் இழுத்துக் கட்டிக் கொண்டு, ஆளானஆடிமாசம் ... ஆசைவைச்சேன் உன் மேலத்தான்... போன்ற நாட்டுப் பாடல்களை பாடிக்கொண்டு வயலில் வேலை செய்யும் கிராமத்துப்பெண்களைக்காணுகிறேன்.நேற்றுவரை சென்னையில் ஷேக்ஸ்பியரை அலசிக்கொண்டிருந்த தேவகி இன்று திடீரென்று அசல் பட்டிக் காடாகமாறி வயலிலும் வீட்டிலும் வேலை செய்யும்போது நான் வியந்து போகிறேன். தாங்க முடியாத ஆச்சரியம் அன்பு இப்படி சொல்ல முடியாத எண்ணங்களின் கூட்டாகத் திண்டாடி அப்படியே அவளைக் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறேன்.

கிராமத்துப் பெண்ணான தேவகி ஆச்சரியத்துடன் தனது குருவும், ஆசிரியையும் தோழியும் பாதுகாவலருமானப் பரிமளாவைப் பார்க்கிறாள்இயற்கை வினோதங்களில் மனிதர்களல்லாத உயிரினங்களின் வாழ்க்கை முறை விந்தையானதுஒருமாடு கன்று ஈன்றால் ஓரிரு ஆண்டுக்குள் அந்த கன்று வளர்ந்து ஒரு முழு நிலை மாடாக உருவாகிவிடுகிறது. அந்நிலையில் அதன் உடல் வளர்ச்சி காரணமாக காளை பசுவைத் தேடுகிறது. பசு காளையை நாடி ஓடி தனது இன உறவின் தவிப்பைக் தணித்துக் கொள்கிறது. பருவ வயதினளான இவள் எதன் அடிப்படையில் என்னைக் கட்டித் தழுவுகிறாள்.

நான் வெட்கத்துடன் கிராமவாழ்க்கை முறை சொல்லிதேவகிக்கு

 இப்படிப் பட்ட வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்திய தற்காக

 நன்றி சொல்லுகிறேன்.அவளது பெற்றோர்களைப்பற்றியும் ஊர் உறவுகள் பற்

றியும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு மேலும் மேலும்

 விவரங்கள்கேட்கிறேன்.

தந்தை அழகிய சிற்றம்பலம்.எவ்வளவு அற்புதமான தமிழ்பெயர்.

இலக்கியவாதிகள் இந்த பெயரின் விளக்கமாக ஒரு காவியம்

 படைப்பார்கள்என  நினைக்கிறேன்.

ஊரில்விவசாயம்தான்முக்கியவாழ்வாதாராம். வேறுஎந்தவிதமானதொழிற்கூடங்களும்இல்லை. பஞ்சமர்கள்என்ற 5 விதமானமக்கள்ஊர்மக்களுக்குஎல்லாவேலைகளும்செய்கிறார்கள். தலைஅலங்காரத்திற்குநாவிதன்; துணிவெளுக்கவண்ணான்; மார்கழிமாதம்போன்றசமயங்களில்ஊரைஅழிவிலிருந்துகாப்பாற்றும்நோக்கன்; ஊரில்இழப்புகள்ஏற்படும்போதுஉதவிசெய்யவெட்டியான்போன்றோர்கள்இருந்தார்கள். இவர்கள்எல்லோருக்கும்பொதுஇடங்கள்ஒதுக்கப்பட்டிருந்தன. ஆடு, மாடுகளுக்குஆங்காங்கேமேய்ச்சல்நிலம்ஒதுக்கப்பட்டிருந்தது. நீர்நிலைகள்அற்புதமாகஒழுங்காகஅமைக்கப்பட்டுநீர்வரவும்வடிகாலும்சிறப்பாகஇருந்ததால்எந்தநிலையிலும்ஊரில்வெள்ளப்பெருக்குஏற்படுவதில்லை. கடற்கரைசுமார் 15 கி.மீ. தொலைவில்இருந்தாலும்ஊரில்நிலத்தடிநீர்தான்குடிநீர். வயல்வெளிகளுக்குக்காவிரிஆற்றுப்பாசனம்தான். ஊர்மக்கள்ஒற்றுமையாகஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழ்ந்துகொண்டிருந்தகாலமது.

சுமாரான பள்ளிப்படிப்புடன் விவசாயம் பார்க்க வந்து விட்டவர் அழகிய

 சிற்றம்பலம். ஆனால் அன்றைய கிராமப்புற கல்வியில் சற்றே தமிழ் படிக்கத்

 தெரிந்தவர்கள் பெரிய புராணத்தையும், சிலப்பதிகாரத்தையும்

, திருவாசகத்தையும், திருவருட்பாவையையும் மேலும் கீழுமாக முன்னும்

 பின்னுமாகப் புரட்டிப் போட்டவர்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக இருந்தவர்

 அழகியசிற்றம்பலம். திருமணமாகி ஒரு பெண்ணுக்குத் தந்தையாக

 வாழ்ந்தாலும் அவர் ஒரு யோகி என்று நான் ஆணித்தரமாக சொல்லுவேன்

. தினமும்காலை  4 மணிக்கெல்லாம் அலாரம் இல்லாமலேயே

 விழித்துக்கொண்டு காலை க்கடன் களை முடித்துவிட்டு, விளக்கறியா

 இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற குழந்தையினும் மிகப்

 பெரிதும் சிறியேன் என்ற திருஅருட்பா ஆறாம் திருமறையின் பிறப்பவம்

 பொறாது பேதுறல் பகுதியைப் படிப்பார். ஒருநாள், கல்லாப்பிழையும்,

கருதாப்பிழையும், கசிந்துருகி நில்லாப்பிழையும், நினையாப்பிழையும், நின்

 ஐந்தெழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாய்பிழையும் தொழாபிழையும் 

எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே என்ற பட்டினத்தார் பாடல்களைப் படித்து நெஞ்சுருகுவார்.

மண்ணை நேசிக்கும் பெரும்பாலான கிராமத்து மக்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் இருந்திருக்கிறது. மாலை நேரங்களில் பல இடங்களில் கூத்துப்பாட்டும் புராணச் சொற்பொழிவுகளும் நடக்கும். இப்படிப்பட்டவைகளைக் கேட்டு கேட்டு வளரும் குழந்தைகளுக்கு நீதி நெறி விளக்கம் தன்னாலேயே விளக்கம் பெறும். அதனால் அவர்களதுவாழ்வில்பஞ்சமாபாதகங்களுக்குப்பயப்பட்டுஓரளவுநலமோடும்வளமோடும்வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

சித்திரப்பாவை என்ற தேவகியின் அம்மாவும் அவளது தந்தை அழகிய சிற்றம்பலத்திற்கு கொஞ்சமும் குறைந்தவர் இல்லை. சன்னாநல்லூருக்கருகில்சுமார் 10 கி.மீ. தூரத்திலுள்ள செம்பிய நல்லூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சித்திரப்பாவை. ராஜகுரு என்ற அவரது தந்தை உண்மையிலேயே ராஜகுரு தான். கிராமத்துப்        பஞ்சாயத்துத் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் செம்பிய நல்லூர் மக்களின் நல் வாழ்க்கைக்குப் பாடுபட்டவர்.

அப்படிப்பட்ட ராஜகுரு அவர்கள் சித்திரப்பாவை சுமார்  10 வயது சிறுமியாக இருக்கையில் அகால மரணமடைந்தார். சித்திரப்பாவைக்கு இரண்டு தம்பிகள் இருந்தனர். ராஜகுரு அவர்களின் துணைவியர் மூன்று குழந்தைகளையும் வைத்துக்கொண்டு தங்களுக்கிருந்த கொஞ்ச நில புலன்களின் வருவாயிலும் உறவினர்களின் அனுதாப ஆதரவுடன் வாழ்ந்து வருகையில் தான் அழகிய சிற்றம்பலத்துக் குடும்பத்தினர் பெண் தேடி வந்தனர். சற்றே வசதி படைத்த அவர்கள் தந்தை யற்ற பெண்ணாக இருந்தாலும் குடும்பத்திற்கேற்ற குண நலன்களைக் கொண்டவர் என்ற பலரின் ஒருமித்த கருத்தால் ஈர்க்கப்பட்டு அழகிய சிற்றம்பலம் &சித்திரப்பாவை திருமணம் நடந்தது.

அழகிய சிற்றம்பலம் பல விதங்களிலும் ஒரு உதாரண புருஷனாக வாழ்க்கை

 நடத்துபவர்.  நிறைய வசதிகள் இருந்தும் பேராசைப்படாதவர்.  பிறரது

 துன்பத்தைத் துடைக்க தன்னாலான எல்லா உதவிகளையும் செய்பவர். ஊரில்

 சிலர் கூட்டுக் குடும்பங்களாக இரண்டு மூன்று தலைமுறை என்று ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். நான்கு கட்டு ஐந்து கட்டு என்று பெரிய பெரிய வீடுகளாக இருக்கின்றன.  இன்றைய நவநாகரீக வாழ்வில் கூட்டுக் குடும்பம் உடைந்து போய் விட்டது என்றும் இளைய சமுதாயத்தினரிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது என்றும் சொல்லுகிறார்கள். ஆனால்இவைகள்இன்றும்சிலகுடும்பங்களில் காப்பாற்றப்படுகின்றன என்பதுதான உண்மை.

ஆணும் பெண்ணும் சரி சமமாகப் படித்து வேலை பார்த்தாலும் தனித் தனியாக பல இடங்களில் பல நாடுகளில் வாழ்ந்தாலும் குடும்பத்து நிகழ்ச்சி என்றும் ஊரில் ஒரு பொது நிகழ்ச்சி என்றும் நடக்கும்போது இவர்கள் இன்பமாக மகிழ்ச்சியாக வந்து கலந்து கொள்கிறார்கள்.

குடும்பக் கட்டுப்பாடு அறிமுகமாகாத நாளில் அழகிய சிற்றம்பலம் தம்பதியினர்க்குத் தேவகி ஒருபெண்ணாக எப்படித் தனித்துப் போய்விட்டார் என்பது ஒரு ஆச்சரியம்தான்.  காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் என்ற பகைவர்களை அடக்கி ஆண்டவர் அழகிய சிற்றம்பலம். அவரது விளக்கப்படி திருமணம் என்ற பந்தம் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இல்வாழ்க்கை நடத்தவும் ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் அடைக்கலம் தர ஏற்பட்ட உறவு என்பார். தங்களுக்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் பொழுது இருவரும் உடல், உயிர்உள்ளம் ஒன்றி இன உறவு கொள்ளவும் அதன் மூலம் சத்தியபுத்திரர்கள் தோன்றவும் வேண்டும் என்பார். இயற்கையில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களும் Cosmic Force என்னும் மாபெரும் சக்தியினால் நடத்தப்படுகின்றன. அதன்படி ஆடு மாடுகள் கூட தினமும் இன உறவு கொள்வதில்லை. கற்பமாகிய பெண் இனத்துடன் ஆண் இனம் மீண்டும் இன உறவு கொள்வதில்லை. இப்படி இயற்கையைப் படிப்பவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் சென்று முனைவர் பட்டம் வாங்கியவர்களைவிட அறிவு ஜீவியாக, ஆச்சர்யப்புருஷர்களாக இருப்பதைக்காணலாம். தேவகியின்தந்தைஅப்படிஒருயோகி,

கிராமப்புறங்களில் இன உறவு ஒரு பொழுதுபோக்குநிகழ்ச்சியாகவும் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குடும்ப வளர்ச்சிக்கு உதவும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அங்கும் கூட தனி மனித உணர்வுகள் உயர்தர்ம நெறிகள் மதிக்கப்படுகின்றன. என்பதற்கு அழகிய சிற்றம்பலம் &சித்திரப்பாவை தம்பதியினரே ஒரு உதாரணம்.

மனித வாழ்வின் ரகசியங்களைத் தெரிந்து கொண்ட ஒரு ஞானிபோல் அழகிய சிற்றம்பலம் ஐயா பேசும் போது நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பதைத்தவிர எதிர் கேள்வி கேட்பதற்கோ வேறு விளக்கம் கேட்பதற்கோ தோன்றாது.

பிண்டம் எனப்படும் நமது உடம்பிற்கும் அண்டம் எனப்படும் வெளி உலகுக்கும் தொடர்பு உள்ளது என்று அவர் விளக்குவார். அண்டமும் பிண்டமும் ஒரு சில நிலைகளில் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று நம் விஞ்ஞானிகள் வேதகாலத்திலேயே கண்டறிந்திருக்கிறார்கள்  என்பதைப்   படித்திருக்கிறேன்.ஆனால் நாம் அறிந்த பல வேத விற்பன்னர்கள் மட்டுமல்லாமல் நாம் அறியாத மாபெரும் சித்தர்களும் வித்தகர்களும் இம்மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை அழகிய சிற்றம்பலத்தின் உருவில் அறிந்து நான் ஆச்சரியப்பட்டுப்  போகிறேன்.

அந்த இளமைப் பருவத்தில் கிராமத்தைப் பற்றிய ஒரு வித மௌனமான ஆக்கிரமிப்பு என்னுள் நடந்து ஒவ்வொரு முறை விடுமுறையில் தேவகி சன்னாநல்லூர் போகும் போதும் நானும் உடன் சென்று சில நாட்கள் அவர்கள் குடும்பத்துடன் தங்கி வருவது வழக்கமாகிவிட்டது.

காலம் ஓட நாங்கள் கல்லூரியின் கடைசி வருடத்தில் நுழைந்தோம். வழக்கம் போல் விடுமுறையில் தேவகியுடன் நான் சன்னாநல்லூர் சென்றேன். இப்படிப்பட்ட ஒரு நாள் தான் அந்த விபத்து நடந்தது.

ஏன் நடந்தது ?  எப்படி நடந்தது ?

என்று விளக்கம் சொல்ல முடியாமல் கிணற்றில் தண்ணீர் இழுக்கும் போது

 வழுக்கி விழுந்து சுவரில் தலை அடிபட்டு இரண்டு நாட்கள் கோமாவில்

 இருந்து விட்டு எனது இன்னுயிர்த் தோழி தேவகி மறைந்து விட்டாள். ஒரே பெண்ணைப் பறிகொடுத்து விட்ட அழகிய சிற்றம்பலம்தம்பதியினர் ஒடிந்து போயினர். அவர்களுக்காகவே அவர்களின் பெண்ணாகவே, தேவகிக்காகவே ,தேவகியாகவே இந்தக்கிராமத்தின் ஆக்கிரமிப்புக்காரணமாகவே நான் இன்னமும் எனது சன்னாநல்லூர் பயணத்தை தொடருகிறேன்.

ஒரு முறை அழகியசிற்றம்பலம் அவர்களிடம் கிராமப்புறத்தில், விவசாயக் குடும்பத்திலிருக்கும் நீங்கள் எப்படி இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று எண்ணாமல் இருந்துவிட்டீர்கள் என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் சொல்லிய இரண்டு விளக்கவுரை என் பொட்டில் அடித்தது போன்று பதிந்து விட்டது.

கணவன் மனைவி கூடி இருப்பதனாலேயே குழந்தை பிறந்து விடும் என்று பலர் முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குயிற் குஞ்சு முட்டையைக் காக்கை கூட்டு இட்டால் அயர்ப்பின்றி காக்கை வளர்க்கின்றது போல்... என்ற  திருமந்திரம் பாடலைக் கூறி அதற்கு விளக்கம் சொன்னார். தன் குழந்தை என்று எவருமே உரிமை கொண்டாட வேண்டியதில்லை என்றும் உயிர்வாழ்வன எல்லாமே இறைவன் படைப்பு என்றும் சொல்லுகிறார்.

பெற்றவர்கள் என்பவர்கள் இறைவனின் அருளைப் பெற்றவர்கள் என்றும் அதன் காரணமாக புற உலகில் அருவமாய் திரிந்து கொண்டிருந்த ஒரு உயிர் தன்வினை &பெறப்போகிறவர்களின் பிராராப்த கர்ம வினை காரணமாக சம்பிரதாயமுறையால் தந்தையாகப் பட்டவன் சுக்கிலப் பையினுள் வந்து ஒரு கோடியே ஒன்பது லட்சத்து அறுபதினாயிராம் கணப் பொழுது தங்கி பின்னர் அவனது கருணையினால் சம்பிரதாய முறையால் தாயாகப்பட்டவரின் கருவறை சேர்கிறது. அவளது கருணையினாலும் கவனிப்பினாலும்   6 கோடியே நாற்பத்தெட்டு லட்சம்கணப்பொழுது கருவறை வளர்ச்சி பெற்று தன் கர்மவினை தீர்க்க இம் மண்ணுலகில் பிரவேசிக்கிறது. அதற்கு நாம் எப்படி உரிமை கொண்டாடமுடியும். பெற்றவர்கள் இறைவனதுகட்டளையைநிறைவேற்றுகிறார்கள்; அவ்வளவுதான்.

 அருணகிரி நாதரின் திருப்புகழில் ஒரு பகுதி எடுத்துக்கூறி எந்தக் காலத்தில் கற்பம் தரித்தால் எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் என்று விளக்கம் சொல்லுகிறார் அழகியசிற்றம்பலம், ஆக தனக்கு ஒரே ஒரு குழந்தையாக தேவகி பிறந்ததும் அவள் இப்படி இளம் வயதில் மறைந்ததும் இறைவன் செயல் என்கிறார்.

எழில் பூத்துக் குலுங்கும் இளமைப்பருவத்தில் ஆண்மைத்திமிரில் அடங்கிப் போயிருக்க வேண்டிய என் ஆருயிர்த் தோழி தேவகியின் உடல் இப்படி கருகிப் போனது ஒரு பேரிடியாக என்னைத் தாக்கியது. திருமணம் என்ற பேச்சை எடுக்கும் போதெல்லாம் எனது தோழியின் உருவமே எதிரில் நிற்க நான் இளமைப் பருவம் கடந்து போகிறேன். போலீஸ் அதிகாரியானாலும் முரடரானஅப்பா, கல்வி கேள்வியில் சிறந்து கலையுணர்வோடிருந்தும் பிடிவாத குணமுடைய அம்மா, இப்படி இவர்கள் ஒத்துப் போக முடியாத பிளவுபட்ட குடும்பச்சூழலில் நான் மணம் வீச முடியாத மலர் போலும் வாசிக்கப்பாடத வீணைபோலவும் உலவி வருகிறேன். ஆனாலும் எனது தனி வாழ்க்கை இருண்டு போய்விடாமல் மேலும் படித்து முதுகலை பட்டமும் பின்னர் மனோதத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றேன்.

சென்னையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உயர்கல்விகற்றாலும், உயர் மட்ட மக்களுடன் உலவி வந்தாலும் எனது ஆருயிர் தோழி தேவகியின் தாக்கம் என்னுள் ஆழ்ந்த, அழிக்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. சன்னாநல்லூர் என்ற அந்த கிராமத்து மண் எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் இனிமையான நினைவுகளையும், தேவகியுடன் பழகிய நாட்களையும் ஆழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்குக் கொண்டு வந்து விடும். அந்தமண்ணின் பெருமையா? அதில் தோன்றி வளரும் மனிதர்களின் ஈர்ப்பா என வித்தியாசப்படுத்த முடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம். மனம் சற்றே இளைப்பாற நினைக்கும் போதெல்லாம் நான் சன்னாநல்லூர் சென்று விடுகிறேன்.

                                         

                                              அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

 

 


 




.



 


 

 









திங்கள், 4 ஜூலை, 2022

                                                 மண்மேடுகள்.(தொடர்...)

 கதைக்களம். 

                   இராணுவத்தில் பணியாற்றியவர்கள் -அதாவது சோற்றுப்பிழைப்புக்காக இராணுவத்திலாவது சேரலாம் என்றில்லாமல் சீருடையை நேசித்தவர்கள்,இராணுவ சம்பிரதாயங்களைப் பெருமையோடு கொண்டாடுபவர்கள் ,இராணுவத்தில் சுமார் 20-25 ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் எல்லைப்புறம்கூட பார்காதவர்கள்,இயற்கைப் பேரிடர்களைக்கலையை முன்னிற்காதவர்கள் ,போர்க்களம் காணாதவர்கள்,உலகிலேயே பழமையான,விண்ணுக்கும் மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த தமிழ் மொழியின் பன்முகப் பரிமாணத்தை உணராதவர்கள்  என இராணுவத்தினரை பலவிதமாகப் பிரிக்கலாம். 

                        இப்படிப்பட்ட மனிதர்களுக்கிடையில் ,ஒரு வித்தியாசமான மனிதரை நாம் சந்திக்கப்போகிறோம்.

                          எல்லைப்புறங்கள் ,இதய வாசல்,

                   தொல்லைகொடுக்கும் பகைவர் படைகள்,

                  அன்னை பாரதம் அழுகின்றாள்;

                  ஆண்மையுள்ளோரை அழைக்கின்றாள்.......     

                    இந்த அழைப்பை ஏற்று சீருடை அணியவந்த சிங்கமென உலாவரும் அந்த மனிதர் .அவருடைய குண நலன்களை வெளியுலகுக்கு தெரிவிக்க வந்தவர் போல் அவரை பல இடங்களில்,பலவிதங்களில்,நேர்காணல் காணும் ஒரு முனைவர் பட்டம் பெற்ற தனியார் நிறுவன உயர் அதிகாரி,இவர்கள் ,தனித்தும் இணைந்தும் சமூக நலனுக்காக செயல்படும்  விதம்.இவர்களது செயல்பாட்டில் இடை இடையே வந்து போகும் சில மனிதர்கள்.இவர்களே கதை மாந்தர்கள்.

                          இமயம் முதல் குமரி  வரை என்றும் காந்தாரம் முதல் பர்மா வரையிலும் என விரிந்து பரந்த இந்தியத் திருநாடே கதைக் களம் .அவர்கள் காத்திருக்கிறார்கள் ......! வாருங்கள் ! அவர்களை சந்திப்போம் 

1.அறிமுகம் .  

                              ஆடுகாட்டி வேங்கையை அகப்படுத்துமாறுபோல்,

                                    மாடுகாட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ ?

                                    கோடு காட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா 

                                   வீடுகாட்டி என்னை நீ வெளிப்படுத்தவேணுமே. 

                                                                                               -    சிவ  வாக்கியார் 

புவியியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள் அண்டங்கள் பற்றியும் அவை வெளிப்படுத்தும் அதிசயங்கள் பற்றியும் ஏராளமான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.நமது ஆய்வுகளுக்குள்ளான சூரிய மண்டலமும் அதன் ஆளுமைக்குள்ளான கோள்கள் மட்டுமல்லாமல் கோடான கோடி அண்டங்கள் இந்த பால் வெளியில் மிதந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.நமது பூமி உருண்டையைப்பற்றி ஆய்வு நடத்துவோர்  சுமார் 600 கோடி வருடங்களுக்கு முன் உலக நிலப்பரப்பு "பாங்கியா" என்ற மாபெரும் கண்டமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தது என்கிறார்கள்.கண்டங்களின் ஈர்ப்பிசைபற்றிய அறிவு விளக்கம் ஏற்பட்டபொழுது இந்த "பாக்கியா  " என்ற மாபெரும் கண்டம்இரண்டாக்கப் பிரிந்து "கோண்டுவானா,மற்றும் "லாவ்ரெழியா "என்றாகியது என்றும் பின்னர் கோண்டுவானா பிரிந்து தென்னமெரிக்கா ,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,இந்தியா மற்றும் அண்டார்க்டிகா என்றாகியது என்று விளக்கம் சொல்லுகிறார்கள்.

               ஆர்வம் காரணமாக புவியியல் பற்றி அறிந்துகொள்ள முற்பட்டாலும் அலுவல வேலை காரணமாக உலகின் பல பகுதிகளுக்கும் அவ்வப்பொழுது சென்றுவரும் எனக்கு இப்புண்ணிய பாரதம் பிறந்த நாடாக அமைந்தது எனது பூர்வ ஜென்ம பலனாக இருக்கலாம்.எண்ணற்ற மாமனிதர்கள் இந்த மண்ணிலே பிறந்து மனிதகுலம் தழைக்க தம்மை வருத்தித் தவமிருந்து பல உண்மை விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.தொலைதூர பயணத்தின் போது அதுபோன்ற விளக்கவுரைத் தொகுப்புகளை உடன் எடுத்துச்சென்று நேரம் கிடைக்கும்போது படித்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பது எனது வழக்கம்.

                 இப்படி அலுவலக வேலை காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தாலும்,இந்த அஸ்ஸாம் மாநிலம் ஏனோ என்னைக் கவர்ந்திழுக்கிறது.மிக,மிக சாதாரண வாழ்க்கை முறையுடைய மக்கள் .வியாபாரம் காரணமாக பல வியாபார சமூகத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு இடம் பிடித்துக்கொண்டாலும் கிராம புறங்களில் அஸ்ஸாம் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இல்லை.

                இந்தியாவில் ஓடிவரும் நதிகளிலேயே ஆண்மைப் பெயர்கொண்ட பிரம்மபுத்திரா  நதி தன்  பெயருக்கேற்ப  மழைக்காலத்தில் ஒரு வெறிகொண்ட ஆண் மகனைப்போல் எங்கும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது.இமயத்தின் மடியில் மானசரோவர் மலைப்பகுதியில் உருவாகி "போ "என்ற பெயருடன் திபெத்திய மலைப்பகுதிகளில் கிழக்கு நோக்கி ஓடிவரும் நதி அருணாச்சல பிரதேசத்தின் உயர்மலைக் காட்டுப்பகுதிகளில் மறைந்துபோய்விடுகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய  நிலசீரமைப்பாளர்களில்பலர் "போ "நதி எங்கு போகிறது என்று கண்டறிய முற்பட்டு சில இடங்களுக்குப்பிறகு காணாமல் போயிருக்கிறார்கள்.விண்ணில் புகைமூட்டம்போல் காணப்படும் இடத்தில் இந்த நதி ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியாக ஆயிரக்கணக்கான அடி பள்ளத்தில் பாய்கிறது என்று அனுமானித்திருக்கிறார்கள்.

                       கவனத்தில் கொள்ளுங்கள்-இது ஒரு அனுமானம்தான்.எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி பெற்றிருக்கும் இன்றுகூட (2021)"போ "நதி எங்கு மறைத்து, எப்படி வெளிப்படுகிறது என்பதை யாராலும் துள்ளியமாக  அறிய முடியவில்லை.

                இயற்கையின் மாபெரும் சக்திக்கு இது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.தொட்டனைத்தூறும் மணற்கேணிபோல் இயற்கையின் ரகசியங்கள் ஒவ்வொரு யுகத்திலும்,ஒரு புது செய்தியாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.North East Frontier Agency (N E F A ) என்று முன்னாள் அறியப்பட்டு இன்று ஐந்து மாவட்டங்களைக்கொண்ட அருணாச்சலப்பிரதேசம் எனப்படும் மாநிலத்தில் லோஹித் மாவட்டத்தில் வெளிப்படும் மாநதியே பிரம்மபுத்திரா என்று அனுமானிக்கிறார்கள்.ஆற்றுப் பயணம் என்று கடலின் சங்கமத்திலிருந்து மேல்நோக்கிப் பயணிப்பவர்கள் லோஹித் மாவட்டத்தின் காட்டுக்குள் இன்றுவரை நுழைய முடியவில்லை.திருமந்திரம் வழங்கிய திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதை விவாதப்பி பொருளாக ஏற்று பட்டிமன்றம் நடத்தும் மக்களுக்கிடையில் "போ "நதியின் பள்ளத்தாக்கில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வயதுடைய  மாமுனிவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.



                    குடிசைவீடே பிரம்மபுத்திராவின் வெள்ளப்பெருக்கில் மிதந்துகொண்டிருந்தாலும் வீட்டின் கூரைமேல் உட்கார்ந்துகொண்டு தூண்டில் போட்டு மீன்பிடிக்க முயற்சிக்கும் இந்த அஸ்ஸாம் மக்களின் வெள்ளந்தியான மனமும் உலகைப்புரிந்துகொள்ள முடியாத அறியாமையும் என்னை வியப்பிலாழ்த்தும்.நாள் முழுவதும் இப்படித் தூண்டில் போட்டுக்கொண்டிருந்தாலும் சுண்டு விறல் அளவுக்கு ஒரு மீன் கிடைத்துவிட்டால் அவர்கள் துள்ளிக்குதித்து தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.பெரும்பாலும் ஆண்கள் சோம்பேறிகளாகத் திரிகிறார்கள்.இனப்பெருக்கம் செய்வதுதான் அவர்களது முக்கிய வேலைபோல் சாலையின் பல இடங்களிலும் கூட்டம் கூட்டமாக அரைநிர்வான -முழுநிர்வானக்  குழந்தைகளைக் காணலாம்.இந்த மழை வெள்ளத்தினூடே நாலைந்து வாழை மரங்களை ஒன்றாகக்கட்டி ஒரு தெப்பம் போல் செய்து அதை அங்கும் இங்கும் போய்வர உபயோகிக்கிறார்கள்.திருமணம் வரை ஒழுங்காக உடை உடுத்தும் பெண்கள் திருமணத்திற்குப்பின் இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று ரவிக்கை அணிவதில்லை போலும்.ஆனாலும்  வயதுப்பெண்கள் தங்களது பள்ளிக்கூட சீருடையான பச்சை பார்டர் போட்ட வெள்ளைப்புடவையும் பச்சை வவுக்கையும் போட்டுக்கொண்டு கையில் ஒரு கோலுடன் ஒரு தேவதைபோல் அந்த வாழைமர தெப்பத்தில் வருவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன்.

                 அவ்வப்பொழுது இனக்கலவரத்தினாலும்,பொருளாதார பிரச்சினைகளாலும் ஊர் ஊராக  வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படுகின்றன.மூங்கிலியும் கோரைப்புற்களாலுமான வீடுகள் வெகு சீக்கிரம் சாம்பலாகிப் போய்விடுகிறது.

                  "ஹட்ஜாவோ .........ஹட்ஜாவோ" 'என்ற உரத்தகுரலும் தொடர்ந்து ஒரு போர்ட்டர் தலையில் சாமான்களுடன் வேகமாக வருகிறான்.ஒரு ரயில்வே  சந்திப்புக்கே உரித்தான நெரிசலுடனிருக்கும் இந்த  நியூ  பொங்கைகாவ்ன்  ஸ்டேஷனில்சமீபத்திய இனக் கலவரத்தினால் ஏற்பட்ட கொலை,கொள்ளை வெறிச்செயல்களால் பல அஸ்ஸாம்  மக்கள் மேற்கு வாங்க நகரங்கள் நோக்கி தங்களது உடைமைகளுடன்  புறப்பட்டு விட்டதால் வழக்கத்திற்கு மாறான கூட்டம்.ரயில் பெட்டிகளின் கூரைமேல் கூட ஏறி மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். 

         பொதுவாக இயற்கையை ரசிக்கும் இயல்புடைய எனக்கு இந்த மக்களின் போராட்டமும் இதனால் சில மண் சட்டிகள்,பானைகள்,ஒரு ஆட்டுக்குட்டி, என்ற தங்களது உடமைகளை  எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்ட நிலை என்னுள் ஆழ்ந்த சிந்தனையைத்தூண்ட என் மன  ஓட்டத்தின் வேகத்தை போர்ட்டரின் சப்தம் தடுத்து நிறுத்திவிடுகிறது.

                  கண்ணாடியைக் கழட்டி துடைத்துவிட்டு திரும்பவும் போட்டுக்கொண்டு போர்ட்டரின் சப்தத்தினால் சிந்தனைக்கு கலைந்து சப்தம் வந்த திசையை நோக்கிப்  பார்க்கிறேன்.கல்கத்தா செல்லவிருக்கும் "காம் ரூப் "எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிறது.ஒரு நடுத்தர வயது மனிதர் போர்ட்டரின் பின்னே அவசரம் அவசரமாக ஓடிவருகிறார்.

                                ஜன்னலோரமாக நான் அமர்ந்திருந்த முதல் வகுப்பு  பெட்டிக்கருகில் சாமான்களைப்போட்டுவிட்டு சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த ரயில்வே கண் ட க்டரிடம் சென்று என்னவோ கேட்கிறார்.தனக்கு முதல்வகுப்பு ரிசர்வேஷன் கான்பெரம்என்று வந்தும் கூட தனது பெயர் லிஸ்டில் இல்லாதது குறித்து கோபமாகவும் வேதனையுடனும்  அவர் பேசுவது காதில் விழுகிறது.நமது நாட்டில் ரயில்வே பயணத்தில் இப்படி நடப்பது சர்வ சாதாரணம்.இந்தியன் ஆயில் கார்பொரேஷனில் ஒரு பெரிய உயர் அதிகாரியாக இருக்கும் எனக்கே பல நேரங்களில் இப்படி நடந்திருக்கிறது.பெண் என்றும் பாராமல் கண்டிப்பாக இடமில்லை என்று சொன்னதினால் பல நேரங்களில் நான் பயணத்தைக் கான்சல் செய்துவிட்டு ரயில்வே அதிகாரிகளுடன் சண்டை போட்டிருக்கிறேன்.

                        அவர் என்னவோ பேசிவிட்டு இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தபின் ஓய்ந்துபோய் நிக்கிறார்.பார்ப்பதற்கு தென்னிந்தியார் போலிருக்கிறார். மொழியறியா இம்மாநிலங்களில் நான் பயணம் செய்யும்போது தமிழர்களைப்பார்த்தால் இயற்கையாக வரும் ஒரு நட்புணர்வு எப்பொழுதும் தோன்றுவதுபோல் இப்பொழுதும் தோன்றுகிறது.இராணுவத்தினராக இருப்பாரோ ? இப்படி மொழியறியா இம் மாநிலங்களில் வழியறியா எல்லைப்புறங்களில் எதிகளுக்கும் இயற்கைக்கு கொடுமைகளுக்குமாக சின்ன பின்னமாக்கப்படும் இராணுவத்தினர் மீது எனக்கு எப்பொழுதும் ஒரு அன்பும் அனுதாபமுமுண்டு.இளம் வயதில் இராணுவத்தினர்களைப்பற்றி அதிகம் கேட்டிருந்தால் அவர்களிடம் ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது.திருமணம் என்ற ஒன்று ஆகியிருந்தால் ஒருவேளை யாராவது இராணுவத்தினரை மனந்திருப்பேனோ என்னவோ ?பள்ளி கல்லூரிப் படிப்பு என்று தொடர்ந்து ஏற்றுக்கொண்டவேளை எதுவாக இருந்தாலும் அதில் உள்ளம் ஒன்றுபட்டு ஈடுபடும் எனது மனப்பாங்கு என்னை ஒரு முதுகலை  பட்டதாரியாக்குகிறது. பின்னர் எம் பி ஏ ,மனோதத்துவதில் ஓரு டாக்டரேட் என்று வாழ்க்கைப்பயணம் எங்கெங்கோ திசை திரும்பிப் போய்விட்டது.பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் இவர் யாராக இருப்பார் ?.

               Excuse me.! I am Parimalaa.Are you going to Calcutta ?If so,please get into the train.I shall arrange a berth for you.

              முன் பின் அறிமுகமில்லாமல் நான் பேசியதும் அவர் விழிக்கிறார்.எதோ பேச வாய் திறக்கிறார்.

                        Please......There is no time to discuss.Kindly get into the train. என்கிறேன். 

           அவசரம் அவசரமாக ஓடிவந்து ஏறிக்கொள்ளவும் வண்டி புறப்படவும் சரியாக இருக்கிறது.

                              நீரின் மேற் குமிழி  என்ற நிலையற்ற இவ் வாழ்வினிலே நாளும் பல புதுமையான மனிதர்களை  சந்தித்துப் பிரிகிறோம்.சந்தித்த அனைவரையுமே மனதில் கொள்ள நினைத்தால் இந்த இதயம் ஒரு குப்பைமேடாகிவிடும்.பிறகு எழிலோவியமான சில மனிதர்களுக்கோ இனிமை சிந்தும் அவர்களது நினைவுகளுக்கோ இந்த இதயத்தில் இடமில்லாமல் போய்விடக்கூடும்.இந்த விந்தையான மனிதரை சந்தித்ததும் அப்படித்தான்.. 

                          என்னை அறிமுகம் செய்துவிட்டு என்னோடு வரவிருந்த துணை அதிகாரி ரிசர்வேஷன்   செய்திருந்தும்கூட கடைசிநேரத்தில் வரமுடியாமற் போய்விட்டது.இது தான்  அவரது டிக்கெட்.So far all purposes you are Nirmal kumar Bhattacharya.! ! என்று அவரிடம் சொல்லுகிறேன்.

                          இலேசான புன்முறுவலுடன் ,Well !  I am Arvind,  என்கிறார்.

           அதுவரையில் ஆங்கிலேயத்திலேயே பேசிக்கொண்டிருந்த நான் அவர் பெயரைக் கேட்டவுடன் ,"நீங்கள் தமிழரா " ? என்கிறேன்.திடீரென்று அவர் தமிழராக இருந்துவிடக்கூடாதா என்ற ஒரு ஏக்கமான பரிதவிப்பு ஒரு வினாடி என் இதயத்துள் ஓடி மறைகிறது.

                       ஆம். ! என் பெயர் அரவிந்தன்.தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் ஒரு கிளைநதியோரத்தில் பிறந்தவன் நான். 1962ல் சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்திய இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்த அவசரகால அழைப்பு விடுத்தபொழுது தமிழக பொதுப்பணித்துறையில் நிரந்தர பொறியாளராக இருந்த நான் அதை விட்டு விட்டு இராணுவத்தில் சேர்ந்தேன்.மனதாலும் செயலாலும் இந்தப் புனிதமானப் பணியை நான் விரும்புகிறேன். வெல் !  இருபதாண்டு காலம் ஓடிவிட்டது.

                        வழியெல்லாம் அவர் என்னென்னவோ பேசிக்கொண்டேயிருக்கிறார்.ஆச்சர்யமாக இருக்கிறது.இப்படியும் சில மனிதர்களா ?.ஏற்றுக்கொண்ட வேலையை ,அது எதுவாக இருந்தாலும் சில நாட்களிலேயே அதில் பல குறைகளைக்கண்டு வெறுப்பதும் அந்த வேலையே தங்களது முன்னேற்றத்துக்கான ஒரு பார்ட் டைம்  வேலையைப்போல் வைத்துக்கொண்டு சொந்த வேலைகளைக் கவனிப்பவர்களையும்தானே  நாம் பார்த்திருக்கிறோம்.அப்படிப்பட்ட சமுதாய சூழலில் இராணுவ வாழ்க்கையை -அதிலும் எல்லைப்புற கடினமான உழைப்பு,போர்நிலை தகுதிக்கானப் பயிச்சிகள் -உள்  நாட்டுக் கலவரங்களில் தங்கள் இன்னுயிர் சகோதரர்களையே  எதிரிகளாகப் பாவித்துப் போரிடவேண்டிய நிலை -இப்படிப்பட்ட வாழ்க்கையை -மிக மிக உள்ளார்ந்த உணர்வுடன் உடலும் மனமும் ஒன்றி நேசிக்கும் ஒரு மனிதரா ?

                           நான் மனம் நெகிழ்ந்து போகிறேன்.இவர் நல்லவர்.இவரைப்பெற்றவர்கள் நல்லவர்கள்.இவரைக் கணவராக அடையபெற்ற பெண் பாக்கியசாலி என்ற எண்ணமும் அதைத் தொடர்ந்து புறநானூற்று,மற்றும் கலிங்கத்துப்பரணி நிகழ்ச்சிகளும் மனதில் ஓடுகிறது.

             இராணுவத்தினர்களைப்பற்றி எனக்கு நேரடி அனுபவம் இல்லை என்றாலும் என் அம்மாவின் அப்பா இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியிருக்கிறார்.என் அம்மா பிறந்ததே பர்மாவில் மேமியோ-மேக்டிலா பகுதியென்றும் இராணுவ வாழ்வின் பெருமைபற்றி அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்.அம்மாவிற்கு சுமார் 10 வயதிருக்கையில் தாத்தா ஒய்வு பெற்றார் என்றும் சில நாட்களிலேயே இறந்துவிட்டார் என்றும் சொல்லுவார்கள்.ஆங்கிலேயர் ஆட்சியில் இராணுவத்தினர் பெரு மதிப்புப் பெற்றிருந்தனர் என்பார்கள்.நன்றிக்கடன்,கடமையுணர்வு,ராஜ விசுவாசம் போன்றவைகள் தமிழர்களுக்கு உலகிலேயே சிறந்த போர்வீரர்கள் என்ற பெயர் வாங்கி கொடுத்துள்ளது.திப்பு சுல்தானுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் போரிட்டபொழுது இராணுவத்தினர் பலர் தங்கள் நாட்டு மன்னனானத் திப்புசுல்தானுக்கு எதிராக -தாங்கள் ஆங்கிலேயர்களின் கூலிப்படைகள் என்ற அவமானம் இல்லாமல் தங்கள் நாட்டு மக்களையே தயவு   தாட்சண்யமின்றி கொன்று குவித்து திப்புசுல்தானையும் தோற்கடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடுகட்டுவதுபோல்  தனியொரு மனிதனுக்காக பிரிட்டிஷ் அரசு "சொக்கலிங்கம் மெடல் "என்ற ஒரு கௌரவ விருதை ஏற்படுத்தி ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் இப்படி சிறப்பாகப்  பணியாற்றிய லான்ஸ் ஹவில்தார் சொக்கலிங்கம் என்ற மெட்றாஸ் பயோனியரைச்சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு வழங்கியதாக அம்மா சொல்லுவார்கள்.

                       இன்றும் கூட Madras Engineer Group  என்ற பெங்களூரில் உள்ள இராணுவப்பிரிவில் இந்த மெடல் வைக்கப்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் அந்த குரூப்பைச்சேர்ந்த ஒரு பயிற்சிப்ப் பிரிவிற்குச்  சொக்கலிங்கம் கம்பெனி என்றே பெயரிட்டிருக்கிறார்களாம். 

                               இப்படி இராணுவ வாழ்க்கை பற்றி நிறையாக கேள்வி பட்டிருந்ததால் அரவிந்தனின் பேச்சும்,கொள்கையும் என்னை மிகவும் மகிழ்வுறச்செய்தன.  

                          அதுமட்டுமல்லாமல் எனது தந்தைவழி பாட்டனாரின் தமையன் தேசப்பற்று காரணமாக சுபாஷ் சந்திர போஸின் Indian National Army  (I N A )  யில் பணியாற்றியவர்.இரண்டாவது உலகமகாப் போரில் ஜப்பானியர்கள் இந்தியாவின் கிழக்கு கோடியில் பர்மாவின் கதவுகளை உடைத்தெறிந்து இந்திய எல்லையை மிதித்த பொழுது ஆங்கிலேய அரசின் புரட்சித் தளபதியான மேஜர் ஜெனரல் வின்கேட் தலைமையில் Chindit என்ற அதிரடிப் படை வீரர்கள்  பர்மா எல்லைக்குள் ஜப்பானியர்களின் பின்புறம் நுழைந்து பலப் பதுங்கிப்பாயும் போர்களைப்  புரிந்துள்ளார்கள்.அங்கு ஜப்பானியர்களுக்குத் துணையாக சுபாஷ் சந்த்ர போஸின் I N A  வீரர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் ..இப்படி நாட்டுப் பற்று-செஞ்சோற்றுக்கடன் என்ற உணர்வோடு எனது குடும்பத்தின் முன்னோர்கள் பணியாற்றியுள்ளது பற்றி நான் பெருமை கொள்வேன்.இன்றும் எங்கள் வீட்டில்,தாத்தா,முப்பாட்டனார்  போன்றோர்களின் இராணுவ உடையிலுள்ள புகைப்படங்கள் உண்டு.

                          ரயில் பயணத்தில் எதிரில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியான அரவிந்தனைப்  பார்த்து நான் பெருமைகொண்டேன்.

                        கல்கத்தா வந்து பின்னர் சென்னை மெயிலில் இடம்கிடைக்காமல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னை சென்றடைந்தோம்.ஒருவரை சந்தித்த சில மணி நேரத்திற்குள் அவரது குடும்பம்,உறவு,குழந்தைகள் என்று தோண்டித்துருவி கேள்விகளைக்கேட்கும் வழிப்பயண நண்பர்களில் இவர் வித்தியாசமானவராகப் படுகிறார்.இராணுவ அதிகாரியாக இருந்தும் இராணுவத்திற்கும்அப்பாற்பட்டவிஷயங்களைத்தெரிந்துவைத்திருக்கிறார்.இலங்கைத்தமிழர்களின்  பிரச்சினை என்னவென்று மிகவும் ஆணித்தரமாகப் பேசும் இவர் வரும் ஒலிம்பிக் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று விவாதிக்கிறார்.தனது சொந்த ஊரான "கண்கொடுத்த வணிதத்தில் "தென்னை சாகுபடி எப்படி செய்வார்கள் என்று சொல்லுகிறார்.அவரது ஊரின் பெயரே ஒரு இலக்கியச்சுவையோடு இருக்கிறது.

                          இப்படிப்பட்ட உத்தம நண்பர் தனது முகவரியைத்தந்துவிட்டு ,பயண உதவிக்கு நன்றி ,நாம் நண்பர்களாகப் பிரிவதற்கு எனது வாழ்த்துக்கள் ,விபத்துகள் நேர்ந்தால் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற வினோதமான வாழ்த்துக்களுடன் அவர் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் கூட்டத்தில் கலந்து மறைந்த போது ஒரு கனவு உலகத்திலிருந்து வந்தது போன்று உணர்கிறேன். 

           ஏன்டி  இப்படி பேயறைந்ததுபோலிருக்கிறாய்  ? என்ற தோழியின்  பேச்சு என்னை நினைவுலகத்திற்கு கொண்டுவருகிறது.

              சாமான்கள் சரியாக இருக்கிறதா மேடம் ? எனது அலுவலக அதிகாரிகள் சாமான்களை சரிபார்த்துக் கொடுக்க,நான் புறப்படுகிறேன்.அன்பான உபசரிப்புடன் கடந்த ஒருமாதகால வீட்டின் நிகழ்வுகளை டிரைவர் கண்ணுசாமி சொல்லிக்கொண்டேபோக வீடு வந்த சேர்கிறேன். 

                                                                                                                             2.சன்னாநல்லூர் .........


.                        

புதன், 18 மே, 2022

                                        இலக்கைத்தேடும்  ஏவுகணை

                    நான் எழுதிய நூல்கள் பெரும்பாலும் எனது வாழ்க்கையில் நடந்த  நிகழ்வுகளும் அதனால் எனது எண்ணங்களில் ஏற்பட்ட தாக்கமும் தான்.ஒரு நிகழ்வு ஒரேமாதிரி தாக்கத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துவதில்லை. அது மனிதர்களின் அந்தக்கரணங்களைப்பொறுத்து மாறுபடும்.இராணுவத்தில் அதிகாரிகளின் பயிற்சியும் பணியும் ஒரேமாதிரி இருந்தாலும்  அவர்களின் தனி வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதில்லை.

                   நான் ஒரு விபத்துபோல் இராணுவ அதிகாரியானவன் என்பது பெரும்பாலோர் அறிவார்கள்.ஆனால் எனது செயல்பாடுகள் எந்த ஒரு பாரம்பரிய  வழி வந்த இராணுவ அதிகாரியும் எண்ணிப்பார்க்காத புதிய பாணியில் இருந்தது. இதன் முழு விபரங்களும் "எல்லைப்புறத்தில் ஒரு இதயத்தின் குரல் " என்ற நூலிலும்,"இலக்கைத்தேடும் ஏவுகணை "என்ற நூலிலும் கிடைக்கும். இதில் இ .தே .ஏ என்ற  இரண்டாவது நூல் 21 தலைப்புகளில்  மிக விரிவான கட்டுரைகளடங்கியது.

           1.மெய்யாய் இருந்தது நாட் செல....நாட் செல...

           2. இழப்பதற்கு ஏதுமில்லாதவன் ,பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே.

           3. விலக்கறியா இருட்டறையில்...

           4.தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ....

           5. நாளை முதல் குடிக்கமாட்டேன்  சத்தியமடி தங்கம்......

          6.வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே....

          7. பால்தர வந்த பழவிறல் தாயம்... 

          8.உண்டால் அம்ம  இவ்வுலகம்... 

          9.பிறந்த இடம் தேடி.....

        10.  காக்கம் வம்மோ  காதலன் தோழி ....

         11.பா அல்  புளிப்பினும் பகல் இருளிலும்....

        12. செய்குவம் கொல்லோ நல்வினை....

         13.இன்று  புதிதாய்ப் பிறந்தோம்....

         14.மதிவேண்டும் ! நின் கருணை நிதிவேண்டும்   !

        15. வாணிகப் பரிசிலேன் அல்லேன் ......

         16. படைக்குநோய் எல்லாம்தான் ஆயினனே ...

         17.கெளசல்யா...சுப்ரஜா......ராமபூர்வா.....

         18.வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து  நீ வெம்பிவிடாதே.....

         19. கையுறவீசி  நடப்பதை நாணிக்  கைகளைக்கட்டியே....

         20. ஓயும் ஜன்மம் இனி ;அஞ்சேல்.... அஞ்சேல்.....

          21. அகிலமெலாம்  கட்டி ஆளினும் ......

              இந்த தலைப்புகளே வித்தியாசமாக இருக்கும் பொது அதில் உள்ள செய்திகளும் வித்தியாசமாகவே இருக்கும்.

               இந்த நூலைப்படித்த ஒரு தமிழறிந்த Major General  இந்த நூல் இந்திய இராணுவத்தினர் ஒவ்வொருவர் கையிலும் இருக்கவேண்டும் என்று பாராட்டு தெரிவித்தார்.ஆனால் வாங்குவோரைத்தான் இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.

                                    காத்திருப்போம்.











 

வெள்ளி, 13 மே, 2022

                                                                       The war.

                 The strain of relationship between adjacent countries  ,causes military and political diturbance. If a country decide to settle the issue militarily then the casualities  that arises out of the conflict  can be multy,and will not be confined to soldiers alone.Take for example the "Indo-Pak war"of 1965.



                 The "Indo -Pak war "1965 was a long term preparation by Pakistan starting in April 1965 at "Kutch-Rajasthan border.In the middle of March 1965 ,the recently commissioned 2 l/t  Ganesan , was granted annual leave of 2 months and he left his unit in UP-Tibet border and reached home Sannanallur,in Tiruvarur Dt. He was very much exited to meet his friends and went to Pamban-Rameswaram,to share his happiness of entering to an unexplored field called "Indian Army ".All his friends got together, shared a bottle of whisky and enjoyed.

                       In the evening,when they were casually turned the Radio (no T V in the village ) there was  news about Pakistan aggression in Kutch and Indian Army alerted.Annual leave of all Army personnel were cancelled and were asked to report to their unit forth with.

                     It was shocking news for Ganesan. He cut short the trip and immediately rushed home.By that time a telegram also was received.He reached chennai central station 

   Thousand and thousands of of military personnel were lyeing in uniform and civil dress in all the platforms.Special Military trains were moving from chennai to Bombay,Delhi,and Calcutta side frequently.With just one year of service and zero military background  Ganesan was thrilled to see the mobilization of Army  and how the country was raising to meet the situation. Ganesan got into Delhi bound train and there were 12 persons in a four berth First class compartment.

                     It was almost like nonstop journey,and Ganesan reached Tanakpur,the terminal railway station to his location.Entire Uttar pradesh was full of civil trucks carrying military personnel and their equipment.The total military units have moved to western India.In that chaos Ganesan ran helter shelter to find out his unit.Finally he met them at Bareilly Railway station about to move to western sector. 



                By that time alarming news were coming about Kutch operation and Indian Army's defence preparations. Ganesan's 6 Mountain Division was placed as Army Headquarter reserve,and was preparing to punch any where in western sector.

                  On 05 Aug 1965 ,the captured Pak infiltrators revealed greater operation by Pak Army and Indian Army was fully prepared to meet the challenge.Maj Gen S K Kurla,an officer who was introduced to Field Marshal Slim,during 2nd world war as the best company commander in South East Asia was the GOC of 6 Mtn Div.

                           As expected the Indo Pak war of 1965 broke out on 01 Sep 65.All over Punjab troops movement was taking place as the situation changes.6 Div  was to launch offensive in Maharajke area near Samba.As the units moved forward,Ganesan was left at Ambala to load heavy machineries like Dozer by rail and then join the unit.

             Having finished that job Ganesan was rushing to Jammu to catch up with  his unit in a 1 ton Nissan.It was 5 th September,Ganesan was entering Pathankot area.Suddenly there was Air raid alarm and troops were running towards cover. Ganesan and his driver stopped the vehicle and ran to side seeking cover. Ganesan changed his position for better cover and ran here and there.Suddenly there was a burst of fire and thundering sound.Before one could realise the situation,Ganesan fell to the ground with terrible pain on right leg near toe.The air alarm was givinig clear signal,and soldiers got up from here and there and resumed their activities.

                 Ganesan's driver came running to him as he was still lying on ground.He could not stand as severe pain was there.Driver helped him to remove the boot.As he stood up a jet of blood sprayed from the toe.A big bandage was put and they moved to trace the unit.At the outskirt of Pathankot,a rear was established and all heavy loads were left and units were moving forward. Ganesan met his company commander,and as per his advice reported to M H Pathankot. There it was diagnised that a splinter had hit Ganesan and he had sustained fracture of bone just above toe. Ganesan was admitted in MH and the driver left to join the unit.

                 War was on full swing as Pak has dropped paratroops and blown off few aircrafts from Pathankot Air base. It was 9 th Sep 65. Pathankot MH was asked to clear all casualities who could stand train journey.So a causality train was arranged. Ganesan was one amongst about 2500 war causalities.

                        Injury,disability and death are the the rewards to those who took up soldiering to protect the safety,honour and integrity of this country.But there are psychological  casualities. These are soldiers who broke down on seeing their colleagues shattering to pieces on direct hit by Artillery shell.Lose of limbs,injuries of different kind  and disability for the rest of the life are the war casualities with whom Ganesan was in the train for about 4 days.

                         As war was going on full swing ,the casuality train started late night from Pathankot and started moving slowly without light.By the time we reached Delhi,all hospitals were full as war casualities had come from Amritsar and Ferospore. So our train was directed to Lucknow. Ganesan was admitted to M H Lucknow.But as the war continued casualties were pouring in.So the M H authorities decided to send maximum soldiers on sick leave  and requwsted them to report to  near by M H on expiry of sick leave.Ganesan reached Chennai on 17 Sep 1965,the day cease fire was announced by both India and Pakistan.

            With one leg on plaster,Ganesan travelled in bus and train and reached his native place Sannanallur. Almost entire village felt that Ganesan had lost one leg in the war and condolences were pouring on. Ganesan was feeling proud and also pitty on the ignorance of the people.

              He reported to M H Madras on expiry of sick leave. The plaster was removed and Ganesan was declared medically fit.When the 1965 Diwali came Ganesan was in MH Madras.He wanted to visit his village and show his both legs.But he was not given leave.Ganesan stealthily left hospital and came back after two days.By that time hell was let loose as per Army procedure. He was declared a "Deserter " and Army HQ and Police were informed.When Ganesan reported back disciplinary action was initiated.He was marched to Commandant LT Col Venkatachalam. After hearing his war stories ,the Commandant took pity on him and sent him back to his unit on the same day.What a  miracle. ?  War causalities are only to report to the Training centres.

                    Ganesan reached his unit which was deployed in Sialkot sector,after their victory in the war and occupying maximum area in enemy country.

             Ganesan was awarded  "Wound Medal -1965.













சனி, 23 ஏப்ரல், 2022

                                               Divine Blessings.

            The Inspirational Park ,established at Sannanallur has got the Antarctic stone, a Motivational hall,and a cosmic Library.The whole project started some time in 2011-12 and slowly progressed.First Antarctic stone was inaugurated on 23 Dec 2012.The Motivational hall started in a thatched shed,and progressed to steel shed and still some improvements are going on.

                 The Cosmic Library started in 2016 and was inaugurated on 17 May 2017.A grand Book release function was held in the Motivational hall on 30 Nov 2019. In March 2020 Corona struck and everything came to stand still.The frequency of visit to Sannanallur also reduced.

                  By early 2022,the corona came under control and normalcy set in life slowly.So Colonel Ganesan and his wife made a trip to the Park on 18 April to clean up and paint the structures.Colonel Ganesan met the new Vice Chancellor of Central University of Tamilnadu located at Tiruvarur,on 19 April and appealed to him about the usage of Inspirational Park.

                     The Cosmic Library has got a guest room with all facility and A/C fitted.It is exclusively for the use of Colonel Ganesan.He and his wife were staying there.On 20 April Ganesan got up as usual at about 0430 hrs ,and after yoga and Breathing exercise opened the main door at about 0600 hrs.He was thrilled to see the Sun God started his journey  and the Cosmic Rays of the Sun was directly falling on Ganesan's parents photograph  kept at the central pillar of the Library.It was an unscheduled miracle.

               We all have heard that our ancient tamils were experts in  many fields of Science.They had designed Temples and placed the main Deity in such a way that the sun rays directly falls on it on a particular day. 

This is in a temple near coimbatore where for the first five minutes of sunrise the sun light directly falls on shiva inside the garpa Graham without any diversion crossing stupa , mani mandapam, and nandhu and artha mandapam. The mystery is that the sun rays not even reached the ground or any other place but it starts its first step of journey by praying shiva.

It is exactly the same thing happened at "Inspirational Park ".The design of Cosmic  Library was time devoted inspiration of Colonel Ganesan that a hexagonal shape structure with a central pillar has come up.In the central pillar facing the entrance a triangular momento consisting of Antarctic map,Madras Sapper symbol and Corps of Engineer crest was fixed. A brass 10 mm rod with 7.62 bullet welded at top holds our National flag.In this background Our Parents photograph was placed.

The Sun's Cosmic Rays were falling on my parents photograph. Is there any requirement of further proof that the '"Inspirational Park " is a highly sensitive silent Energy centre,and all those viewers will be Blessed.

A humble request to all great Astrologers,to comment on this event,

Contact details;9444063794,9884060671.

e mai.;pavasdai.ganesan@gmail.com




                            Thank you.